Posts

Showing posts from February, 2024

அடைமொழி

  அடைமொழி என்பது பலவகைகள் உள்ள ஒரு பொருளை, எவ்வித ஐயமும் இன்றி அப்பொருளை மட்டும் குறிக்கப் பயன்படுத்தும் ஒரு தனிச்சொல் ஆகும். இது பெயரை மற்றும் வினையை என‌ இரண்டு வகைப்படும். பெயரை விளக்கிக் கூற வரும் சொல் பெயரடை எனவும், வினையை விளக்கிக் கூற வரும் சொல் வினையடை எனவும் கூறுவர். பெயரடை - (Adjective) எ.கா :  சிறந்த மாணவன், பெரிய கோவில், வெள்ளை மாளிகை.... வினையடை - (Adverb) எ.கா : மெதுவாக வரைந்தான் , அழகாகச் செய்தாள் ,  வாரந்தோறும் சென்றார்கள் . அடைமொழியானது இனமுள்ள அடைமொழி மற்றும் இனமில்லா அடைமொழி எனவும் இருவகைப்படும். இனமுள்ள அடைமொழி  : பலவகைகள் உள்ள ஒரு பொருளை, எவ்வித ஐயமும் இன்றி அப்பொருளை மட்டும் குறிக்கப் பயன்படுத்தும் ஒரு தனிச்சொல் ஆகும். எ.கா : பால் குடம் (குடத்தில் - பால் குடம்,  தண்ணீர்க்குடம்,  தேன் குடம், நெய்க்குடம் என எது வேண்டுமானாலும் இருக்கலாம் என்னும் ஐயம் ஏற்படலாம் அல்லவா? எனவே  தெளிவாக உணர்த்தவே இவ்வடைமொழி தேவைப்படுகிறது) செந்தாமரை (செந்தாமரை, வெண்டாமரை) தமிழ்ப் புத்தகம் ( தமிழ்ப்புத்தகம், ஆங்கிலப்புத்தகம், கணிதப்புத்தகம், அறிவி...

இரட்டைக்கிளவி - அடுக்குத்தொடர்

 இரட்டைக்கிளவி -  அடுக்குத்தொடர் இரண்டுக்குமான வித்தியாசம். 📖இரட்டைக்கிளவி : 📝இரட்டை (Twin)என்பது இரண்டு எனும் பொருள் தரும் , ஆகையால் இரண்டு சொற்கள் தொடர்ந்து அடுக்கி வந்து ஒரே பொருளைத் தந்தால் அது இரட்டைக்கிளவி எனப்படும். 📝இதனைப் பிரித்தால் பொருள் தராது.  📝இவை பெரும்பாலும் ஒலிக் குறிப்பாகவே வரும்.  📝ஒரு செயல் நடைபெறும் விதத்தினை விளக்கும் வகையில் இருக்கும்.  📝எடுத்துக்காட்டாக :- ஆற்றில் நீர் "சலசல"வென்று ஓடும். 📝 இங்கு நீரானது ஓடும் ஒலிக் குறிப்பை இச்சொல்(சலசல)  உணர்த்துகிறது. 📖அடுக்குத்தொடர் : 📝 அடுக்குத்தொடர் என்னும் சொல்லின் பொருள் ஒரு சொல் மீண்டும் மீண்டும் தொடர்ந்து அடுக்கி வருவதையே குறிக்கிறது. 📝 இச்சொல்லைத் தனியே பிரித்துக்கூறினும் பொருள் தரும். 📝 இது இரண்டு முறை, மூன்று முறை, நான்கு முறை என்று கூட அடுக்கி வரும். 📝 இவை பெரும்பாலும் நம் மன உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை உணர்த்தும் விதமாக அமையும். 📝 எடுத்துக்காட்டாக :- என் வீட்டிற்கு வந்த விருந்தினர்களை "வா வா வா" என அழைத்தேன். 📝இங்கு "வா வா வா" என்னும் சொற்கள் நான் அகமகிழ்ந்து எனது உறவினர்...