Posts

Showing posts from April, 2018

தமிழ் அளவை

அளவுகள் வெருக்கடி     வெருக்கடி என்றால் ஆட்காட்டி விரல், பாம்பு விரல் மற்றும் பெருவிரல் ஆகிய விரல்களால் எடுக்கப்படும் அளவு ஆகும். சிட்டிகை          சிட்டிகை என்பது ஆட்காட்டி விரல்  மற்றும் பெருவிரல் கொண்டு  எடுக்கப்படும் அளவு ஆகும்.

மனு நீதிச் சோழன்

மனு நீதிச் சோழன் கதைப் பாடல் சோழ நன்னாடு சோறுடைத்து சொல்லும் சொல்லோ தேனுடைத்து சோழ நன்னாட்டை ஆண்ட மனுச் சோழனுக்கிருந்தான் ஒரு மைந்தன் வீதி விடங்கன் அவன் பேரே வீதியில் விட்டான் அவன் தேரை பாதி வழியில் தேர்க் காலில் பட்டது பாவம் ஓர் கன்று செத்துக்கிடந்த தன் கன்றை சேர்ந்த பசுவும் கண்ணீரை முத்துச்சரமாய் உதிர்த்ததுவாம் முறையிட மணியை அடித்தது வாம் அடித்தது மணியை மன்னவனும் அதன் துயர் கண்டான் தன் மகனை படுத்திடச் செய்தே தேர்க்காலில் பசுவிற்காக கொன்றானே பசுவின் நீதி காத்திடவே பலிகொடுத்தான் மன்னனுமே  சோழ நன்னாட்டை ஆண்ட மனு ச்  சோழன்  நீதிச் சோழன் ஆனானே .

தமிழ் எண்கள்:

தமிழ் தமிழ் எண்கள்: ௧ - ககரம் உயிர்மெய்க் குறில் ஆகும்     கணக்கினில் அதுவே ஒன்றாகும் . ௨ - உகரம் ஒரு சுட்டெழுத்தாகும்       உயிர் தான் தமிழ் எண்  இரண்டாகும் . ௩ - ஙகரம்  மூன்றாம் . ௪ - சகரம்  நான்காம் . ௫ - ருகரம் எழுத்தோடு எண் ஐந்தாம் . ௬ -  எனில் இறப்பே, எண் ஆறாம் . ௭ - எனும் எழுத்தும் ஏழும் தான். ௮ - அகரம் தமிழின் முதல் எழுத்தாம்       அவ்வெழுத்தே எண் எட்டாகும் . ௯ - எனில் ஏவல்,பூமி,கழி,....     கொள்பொருள் கணக்கினில் ஒன்பது தான். ௰ - எனில் எண் பத்தாகும் . ௱ -  யகரத்தலைகீழ்   நூறாகும். ௲ - விலங்குகள் ஓட்டிடல், வியப்பு சொல்     எண் தமிழ் எண்  ஓராயிரமாம். ௦ - சுழி தான் அடிப்படை தமிழ் எண்ணாம்      சொல் நம் தமிழர் பொட்டாகும். கண்ணும் ஒளியும் இணைந்துள போல் எண்ணும் எழுத்தும் ஒன்றேதான். தமிழ் நெடுங்கணக்கின் நுண்மை பார் தமிழ் மொழி எழுத்தே எண் எனல் பார் உலகின் முதல் மொழி செம்மொழி யாம் இலக்க...