தமிழ் எண்கள்:
தமிழ்
தமிழ் எண்கள்:
௧ - ககரம் உயிர்மெய்க் குறில் ஆகும்
கணக்கினில் அதுவே ஒன்றாகும்.
௨ - உகரம் ஒரு சுட்டெழுத்தாகும்
உயிர் தான் தமிழ் எண் இரண்டாகும்.
௩ - ஙகரம் மூன்றாம்.
௪ - சகரம் நான்காம்.
௫ - ருகரம் எழுத்தோடு எண் ஐந்தாம்.
௬ - எனில் இறப்பே, எண் ஆறாம்.
௭ - எனும் எழுத்தும் ஏழும் தான்.
௮ - அகரம் தமிழின் முதல் எழுத்தாம்
அவ்வெழுத்தே எண் எட்டாகும்.
௯ - எனில் ஏவல்,பூமி,கழி,....
கொள்பொருள் கணக்கினில் ஒன்பது தான்.
௰ - எனில் எண் பத்தாகும்.
௱ - யகரத்தலைகீழ் நூறாகும்.
௲ - விலங்குகள் ஓட்டிடல், வியப்பு சொல்
எண் தமிழ் எண் ஓராயிரமாம்.
௦ - சுழி தான் அடிப்படை தமிழ் எண்ணாம்
சொல் நம் தமிழர் பொட்டாகும்.
கண்ணும் ஒளியும் இணைந்துள போல்
எண்ணும் எழுத்தும் ஒன்றேதான்.
தமிழ் நெடுங்கணக்கின் நுண்மை பார்
தமிழ் மொழி எழுத்தே எண் எனல் பார்
உலகின் முதல் மொழி செம்மொழி யாம்
இலக்கிய இலக்கணத் தமிழ் வாழ்வே
Comments
Post a Comment