வல்லினம் மிகா இடங்கள் அது , இது , அவை , இவை என்னும் சுட்டுச் சொற்களின் பின்னும் எது , எவை என்னும் வினாச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது . அது + பறந்தது = அது பறந்தது . அவை + பறந்தன = அவை பறந்தன . எது + தங்கம் = எது தங்கம் எவை + சென்றன = எவை சென்றன . அது காண் எது செய்தாய் இது பார் ஏது கண்டாய் யாது பொருள் அவை பெரியன யாவை போயின ஆ , ஏ , ஓ என்னும் வினா எழுத்துகளின்பின் வல்லினம் மிகாது . அவனா + சென்றான் = அவனா சென்றான் . அவனோ + பேசினான் = அவனோ பேசினான் . அவனே + சிரித்தான் = அவனே சிரித்தான் . எழுவாய்த்தொடரில் வல்லினம் மிகாது . மலர் + பூத்தது = மலர் பூத்தது வண்டு + பறந்தது = வண்டு பறந்தது . அத்தனை , இத்தனை , எத்தனை என்னும் சொற...
Comments
Post a Comment