பெண்ணே நீ

 * பெண்ணே நீ *வர்ணனை பொருள்* அல்ல *வரலாறு* படைக்க வந்தவள்


* பெண்ணே உன்னை *வருணித்து* வருணத்தே *வரைமுறைக்குள் ஒடுக்கி* விட்டனர்.


* உன்னை *மலர்* என்று கூறிக் *மென்மையாக்கினர்*.


* உன் *அழகை* ப் பெருமை பேசியே *பதுமை* ஆக்கினர்.


* உன்னை *நீரோடு* ஒப்பிட்டு *தண்மை* படுத்தினர்.


* உன்னைத் *தென்றலோடு* ஒப்பிட்டு *மெதுவாய் செல்* என்றனர்.


* ஒருவேளை உன்னை *உன் போக்கில்* விட்டால்... எங்கே நீ *சீறிப்பாய்ந்து* தங்களை *முந்திவிடுவாய்* என்ற பயமோ?... இருக்கத்தானே செய்யும்...


* தன்னிகரற்ற *இறைவனுக்கு இணையாய் உயிரினை தோற்றுவிக்கும்* தெய்வம் ஆயிற்றே நீ!... அந்த பயமோ!...


* *மென்மையான* மனத்தைக் கொண்டாலும் *மலை* யைச் சுமக்கும் உன் மனம் அத்திறம் கண்ட பயமோ?.. என்னவோ?.. இருக்கலாம்...


* இத்தகைய *சூழ்ச்சி* வர்ணனைக் *கூண்டை* உடைத்து *சிறகை விரி* த்த பறவை நீ!....


* இப்படியே இரு, உன் *சுதந்திரத்தை சூன்யம் ஆக்கிடாதே!!!.*.


* பெண் என்பவள் *தாயாய் தாரமாய் தங்கையாய் மகளாய்* என்று தரணியிலே *அன்பு, பரிவு, பாசம் மனிதநேயத்தை* வளர்ப்பவளாய் என்றும் வலம் வரவேண்டும்...


*இப்படியே இரு உன் சுதந்திரத்தை சூனியமாக்கிடாதே!!...


* இன்று, *வானும் மண்ணும் அளந்த* வாமனனைப் போன்று *உயர்ந்திருக்கிறாய்* பெண்ணே நீ *வர்ணனை பொருளல்ல வரலாறு படைக்க வந்தவள்.*..

Comments

Popular posts from this blog

பொருள் விளக்கம்

வல்லினம் மிகா இடங்கள்