வல்லினம் மிகா இடங்கள்
வல்லினம் மிகா இடங்கள்
அது, இது, அவை, இவை என்னும் சுட்டுச் சொற்களின் பின்னும் எது, எவை என்னும் வினாச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.
அது + பறந்தது = அது பறந்தது.
அவை + பறந்தன = அவை பறந்தன.
எது + தங்கம் = எது தங்கம்
எவை + சென்றன = எவை சென்றன.
அது காண்
எது செய்தாய்
இது பார்
ஏது கண்டாய்
யாது பொருள்
அவை பெரியன
யாவை போயின
ஆ, ஏ, ஓ என்னும் வினா எழுத்துகளின்பின் வல்லினம் மிகாது.
அவனா + சென்றான் = அவனா சென்றான்.
அவனோ + பேசினான் = அவனோ பேசினான்.
அவனே + சிரித்தான் = அவனே சிரித்தான்.
எழுவாய்த்தொடரில் வல்லினம் மிகாது.
மலர் + பூத்தது = மலர் பூத்தது
வண்டு + பறந்தது = வண்டு பறந்தது.
அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.
அத்தனை + படங்கள் = அத்தனை படங்கள்
இத்தனை + பறவைகள் = இத்தனை பறவைகள்
எத்தனை + காக்கைகள் = எத்தனை காக்கைகள்
அத்தனை செடி
எத்தனை பசு
இத்தனை பசு.
அவ்வளவு, எவ்வளவு, இவ்வளவு
அவ்வளவு தந்தாய்
எவ்வளவு செய்தாய்
இவ்வளவு துணிவு
அங்கு, எங்கு, இங்கு என்னும் சொற்களின் பின் (இஃது எழுவாய்த்தொடர் ஆகையால் மிகாமலும், குற்றியலுகரச் சுட்டு ஆதலின் மிக்கும் வரும்)
அங்கு செல்
எங்கு கற்றாய்
இங்கு பார்
வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
ஊறு + காய் = ஊறுகாய்
சுடு + சோறு = சுடுசோறு
அலை + கடல் = அலைகடல்
ஆடு + கொடி =
ஆடுகொடி
உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.
கபிலபரணர்
இரவுபகல்
இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.
தமிழ்+ கற்றார் = தமிழ் கற்றார்.
கடல் + கடந்தார் = கடல் கடந்தார்.
மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் ( ஒடு, ஓடு ) வல்லினம் மிகாது.
பூவொடு + சேர்ந்த = பூவொடுசேர்ந்த
கபிலரோடு + பரணர் = கபிலரோடுபரணர்
எட்டு, பத்து தவிரப் பிற எண்களுக்குப்பின் வல்லினம் மிகாது.
ஒன்று + கொடு = ஒன்றுகொடு
இரண்டு + பேர் = இரண்டுபேர்
வியங்கோள் வினைமுற்றுக்குப்பின் வல்லினம் மிகாது.
வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்
வாழிய + பல்லாண்டு = வாழிய பல்லாண்டு
இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்களில் வல்லினம் மிகாது.
சல + சல = சலசல
பாம்பு + பாம்பு = பாம்பு பாம்பு
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிறபெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.
கற்ற + சிறுவன் = கற்ற சிறுவன்
சிறிய + பெண் = சிறிய பெண்
சில மென்றொடர்க் குற்றியலுகரத்திற்குப்பின்
அன்று சொன்னான்
சங்குபட்டி
என்று தந்தான்
இன்று கண்டான்
மென்று தின்றார்
வந்து சேர்ந்தான்
சில வினையெச்ச விகுதிக்குப்பின்
நடந்து சென்றான்
தந்து போனான்
சென்று திரும்பினான்
Super 😎😎
ReplyDelete