Posts

Showing posts from March, 2023

அன்னையர் தின வாழ்த்து

  *அ* ன்பும் அக்கறையும் கொண்டு *ஆ* ண்டுகள் பல கடந்தும் ஆயிரமாயிரம் *இ* ன்னல்கள் கடந்தும் இத்தனை இடையூறுகளுக்கு இடையே  *ஈ* ன்ற போது இருந்த அருள் இம்மியளவும் குன்றாது  *உ* னது அரவணைப்பு என்னும் அரண் கொண்டு எங்களைக் காக்க உனது *ஊ* ணை உருக்கி உயிரையும் உடலையும் துச்சமென *எ* ண்ணி எங்களின் *ஏ* ற்றத்திற்கு ஏணியாய் இருந்தாய் என்பதில் ஏதும் *ஐ* யமில்லை , நாங்கள் எங்களின் *ஒ* வ்வொரு படி(நிலை)யையும் கடக்க வழிதந்த பாலம் நீ, அன்றாடம் நீ *ஓ* திய மந்திரங்களும் இறைவழிபாடுகளும் தான் எங்களின் ஊழ் என்னும் நோயுக்கான *ஔ* டதமாய் எங்கள் வாழ்வை காத்து நிற்கிறது இனியும் காக்கும்.  அன்பு நிறைந்தவளுக்கு எங்களின் அன்னையர் தின வாழ்த்துக்கள்

ஈர் ஒற்று

  ஈர் ஒற்று இரு மெய் எழுத்துக்கள் ஒன்றாக வராது,  ய் , ர் , ழ் இந்த மூன்று எழுத்துக்கள் மட்டும் விதிவிலக்கு. இம்மூன்றும் பின்வரும் ஐந்து எண்களாக மட்டுமே வரும் க், ச், த், ப் & ந் தமிழ்த்தாய் வாழ்த்து. தமிழ்ப்பாடல். ழ் வாழ்க்கை. நிகழ்ச்சி. புகழ்ச்சி. சூழ்ச்சி. இகழ்ச்சி. தாழ்த்தப்பட்ட தாழ்ந்த தாழ்ப்பாள் ர் சேர்க்கை. போர்க்களம் அரசர்க்கரசே. வளர்ச்சி. தளர்ச்சி. கிளர்ச்சி. துளிர்த்தது. வளர்ந்தது. சந்தர்ப்பம். ய் பொய்க்கும். பொய்க்கால் குதிரை காய்ச்சல். காய்த்து. மேய்த்து. மொய்த்தது. வாய்த்தது காய்ந்த. தாய்ப்பால் (எ கா) 1. பிரதமரைப் பார்க்க கிடைத்த வாய்ப்பை எண்ணி பெரு மகிழ்ச்சி அடைந்தேன். 2.புதிதாக நட்டு வைத்தச் செடி துளிர்த்து பின்னர் காய்த்து   உயரம் தாழ்ந்தும் இருந்தது.

பெண்ணே நீ

 * பெண்ணே நீ *வர்ணனை பொருள்* அல்ல *வரலாறு* படைக்க வந்தவள் * பெண்ணே உன்னை *வருணித்து* வருணத்தே *வரைமுறைக்குள் ஒடுக்கி* விட்டனர். * உன்னை *மலர்* என்று கூறிக் *மென்மையாக்கினர்*. * உன் *அழகை* ப் பெருமை பேசியே *பதுமை* ஆக்கினர். * உன்னை *நீரோடு* ஒப்பிட்டு *தண்மை* படுத்தினர். * உன்னைத் *தென்றலோடு* ஒப்பிட்டு *மெதுவாய் செல்* என்றனர். * ஒருவேளை உன்னை *உன் போக்கில்* விட்டால்... எங்கே நீ *சீறிப்பாய்ந்து* தங்களை *முந்திவிடுவாய்* என்ற பயமோ?... இருக்கத்தானே செய்யும்... * தன்னிகரற்ற *இறைவனுக்கு இணையாய் உயிரினை தோற்றுவிக்கும்* தெய்வம் ஆயிற்றே நீ!... அந்த பயமோ!... * *மென்மையான* மனத்தைக் கொண்டாலும் *மலை* யைச் சுமக்கும் உன் மனம் அத்திறம் கண்ட பயமோ?.. என்னவோ?.. இருக்கலாம்... * இத்தகைய *சூழ்ச்சி* வர்ணனைக் *கூண்டை* உடைத்து *சிறகை விரி* த்த பறவை நீ!.... * இப்படியே இரு, உன் *சுதந்திரத்தை சூன்யம் ஆக்கிடாதே!!!.*. * பெண் என்பவள் *தாயாய் தாரமாய் தங்கையாய் மகளாய்* என்று தரணியிலே *அன்பு, பரிவு, பாசம் மனிதநேயத்தை* வளர்ப்பவளாய் என்றும் வலம் வரவேண்டும்... *இப்படியே இரு உன் சுதந்திரத்தை சூனியமாக்கிடாதே!!... * இன்று...

தீபத்திருநாள் - தீபாவளி

 வந்ததம்மா தீபத்திருநாளும் வந்ததம்மா.  தீமை விலகிட நன்மை வழங்கிட  வந்ததம்மா தீபத்திருநாளும் வந்ததம்மா.  இல்லங்கள் தோறும் ஒளிபெற்றிட  உள்ளங்கள் தோறும் கழிப்புற்றிட  வந்ததம்மா தீபத்திருநாளும் வந்ததம்மா.  தீபங்கள் தந்திடும் ஒளியாலே  சாபங்கள் நீங்கிடும் வழியினிலே  சரவெடி எழுப்பிடும் ஒளியினாலே  சங்கடம் நீங்கிடும் நொடியினிலே  அசுரன் என்னும் நரகாசுரனின் ஆட்டம் எல்லாம் அடக்கிடவே  சிருஷ்டியின் வளம் ஓங்கிடவே  கிருஷ்ணன் வதம் செய்திட்டாரே  வந்ததம்மா தீபத்திருநாளும் வந்ததம்மா.வந்ததம்மா தீபத்திருநாளும் வந்ததம்மா.  தீமை விலகிட நன்மை வழங்கிட  வந்ததம்மா தீபத்திருநாளும் வந்ததம்மா.  இல்லங்கள் தோறும் ஒளிபெற்றிட  உள்ளங்கள் தோறும் கழிப்புற்றிட  வந்ததம்மா தீபத்திருநாளும் வந்ததம்மா.  தீபங்கள் தந்திடும் ஒளியாலே  சாபங்கள் நீங்கிடும் வழியினிலே  சரவெடி எழுப்பிடும் ஒளியினாலே  சங்கடம் நீங்கிடும் நொடியினிலே  அசுரன் என்னும் நரகாசுரனின் ஆட்டம் எல்லாம் அடக்கிடவே  சிருஷ்டியின் வளம் ஓங்கிடவே  க...