அன்னையர் தின வாழ்த்து

  *அ* ன்பும் அக்கறையும் கொண்டு

*ஆ* ண்டுகள் பல கடந்தும் ஆயிரமாயிரம்

*இ* ன்னல்கள் கடந்தும் இத்தனை இடையூறுகளுக்கு இடையே 

*ஈ* ன்ற போது இருந்த அருள் இம்மியளவும் குன்றாது 

*உ* னது அரவணைப்பு என்னும் அரண் கொண்டு எங்களைக் காக்க உனது

*ஊ* ணை உருக்கி உயிரையும் உடலையும் துச்சமென

*எ* ண்ணி எங்களின்

*ஏ* ற்றத்திற்கு ஏணியாய் இருந்தாய் என்பதில் ஏதும்

*ஐ* யமில்லை , நாங்கள் எங்களின்

*ஒ* வ்வொரு படி(நிலை)யையும் கடக்க வழிதந்த பாலம் நீ, அன்றாடம் நீ

*ஓ* திய மந்திரங்களும் இறைவழிபாடுகளும் தான் எங்களின் ஊழ் என்னும் நோயுக்கான

*ஔ* டதமாய் எங்கள் வாழ்வை காத்து நிற்கிறது இனியும் காக்கும். 

அன்பு நிறைந்தவளுக்கு எங்களின் அன்னையர் தின வாழ்த்துக்கள்

Comments

Popular posts from this blog

பொருள் விளக்கம்

பெண்ணே நீ

வல்லினம் மிகா இடங்கள்