மனு நீதிச் சோழன்

மனு நீதிச் சோழன்
கதைப் பாடல்

சோழ நன்னாடு சோறுடைத்து
சொல்லும் சொல்லோ தேனுடைத்து
சோழ நன்னாட்டை ஆண்ட மனுச்
சோழனுக்கிருந்தான் ஒரு மைந்தன்

வீதி விடங்கன் அவன் பேரே
வீதியில் விட்டான் அவன் தேரை
பாதி வழியில் தேர்க் காலில்
பட்டது பாவம் ஓர் கன்று

செத்துக்கிடந்த தன் கன்றை
சேர்ந்த பசுவும் கண்ணீரை
முத்துச்சரமாய் உதிர்த்ததுவாம்
முறையிட மணியை அடித்தது வாம்

அடித்தது மணியை மன்னவனும்
அதன் துயர் கண்டான் தன் மகனை
படுத்திடச் செய்தே தேர்க்காலில்
பசுவிற்காக கொன்றானே

பசுவின் நீதி காத்திடவே
பலிகொடுத்தான் மன்னனுமே
 சோழ நன்னாட்டை ஆண்ட மனு
ச் 
சோழன் நீதிச் சோழன் ஆனானே.

Comments

Popular posts from this blog

பொருள் விளக்கம்

பெண்ணே நீ

வல்லினம் மிகா இடங்கள்