இரட்டைக்கிளவி - அடுக்குத்தொடர்

 இரட்டைக்கிளவி -  அடுக்குத்தொடர் இரண்டுக்குமான வித்தியாசம்.

📖இரட்டைக்கிளவி :

📝இரட்டை (Twin)என்பது இரண்டு எனும் பொருள் தரும் , ஆகையால் இரண்டு சொற்கள் தொடர்ந்து அடுக்கி வந்து ஒரே பொருளைத் தந்தால் அது இரட்டைக்கிளவி எனப்படும்.

📝இதனைப் பிரித்தால் பொருள் தராது.

 📝இவை பெரும்பாலும் ஒலிக் குறிப்பாகவே வரும். 

📝ஒரு செயல் நடைபெறும் விதத்தினை விளக்கும் வகையில் இருக்கும். 

📝எடுத்துக்காட்டாக :- ஆற்றில் நீர் "சலசல"வென்று ஓடும்.

📝 இங்கு நீரானது ஓடும் ஒலிக் குறிப்பை இச்சொல்(சலசல)  உணர்த்துகிறது.


📖அடுக்குத்தொடர் :

📝 அடுக்குத்தொடர் என்னும் சொல்லின் பொருள் ஒரு சொல் மீண்டும் மீண்டும் தொடர்ந்து அடுக்கி வருவதையே குறிக்கிறது.

📝 இச்சொல்லைத் தனியே பிரித்துக்கூறினும் பொருள் தரும்.

📝 இது இரண்டு முறை, மூன்று முறை, நான்கு முறை என்று கூட அடுக்கி வரும்.

📝 இவை பெரும்பாலும் நம் மன உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை உணர்த்தும் விதமாக அமையும்.

📝 எடுத்துக்காட்டாக :- என் வீட்டிற்கு வந்த விருந்தினர்களை "வா வா வா" என அழைத்தேன்.

📝இங்கு "வா வா வா" என்னும் சொற்கள் நான் அகமகிழ்ந்து எனது உறவினர்களை அழைத்ததைக் குறிப்பிடுகிறது.

Comments

Popular posts from this blog

பொருள் விளக்கம்

பெண்ணே நீ

வல்லினம் மிகா இடங்கள்