வல்லினம் மிகும் இடம்
வல்லினம் மிகும் இடம்
அ, இ, உ சுட்டெழுத்துக்களின் பின்
• அ + காலம் = அக்காலம்
• இ + சமயம் = இச்சமயம்
• உ + பக்கம் = உப்பக்கம் ('உ' எனும் சுட்டெழுத்து வழக்கில் இல்லை)
எ என்னும் வினா எழுத்தின் பின்
• எ + பொருள் = எப்பொருள்
அந்த, இந்த, எந்த என்னும் அண்மை, சேய்மைச் சுட்டுக்கள், வினாச் சுட்டுக்களின் பின்
• அந்த + காலம் = அந்தக் காலம்
• இந்த + சிறுவன் = இந்தச் சிறுவன்
• எந்த + பையன் = எந்தப் பையன்
அப்படி, எப்படி, இப்படி என்னும் சொற்களின் பின்
• அப்படி + கேள் = அப்படிக் கேள்
• இப்படி + சொல் = இப்படிச் சொல்
• எப்படி + பார்ப்பது = எப்படிப் பார்ப்பது
இரண்டாம் வேற்றுமை அசை உருபுக்குப்பின் (ஐ)
• அவனைக் கண்டேன்
• செய்யுளைச் சொன்னேன்
• அவளைத் தேடினேன்
• குறளைப் படித்தேன்
இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
• மயிலைக் கண்டேன்.
• மலையைச் சார்ந்தேன்.
• உணவைத் தந்தேன்.
• குறளைப் படித்தேன்.
நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
• தந்தைக்குக் கொடுத்தான்
• தாய்க்குச் சொன்னான்
• தங்கைக்குத் தந்தான்
நான்காம் வேற்றுமை உருபுக்குப்பின் (கு)
• அவனுக்குக் கொடுத்தேன்
• அவளுக்குச் சொன்னேன்
ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணைப்பெயராக இருப்பின் பின்வரும் வல்லினம் மிகும்.
• நாய்க்குட்டி
• புலித்தலை
• நரிப்பல்
இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும்.
• தண்ணீர் + குடம் = தண்ணீர்க்குடம்
• மரம் + பெட்டி = மரப்பெட்டி
• பூட்டு + சாவி = பூட்டுச்சாவி
• விழி + புனல் = விழிப்புனல்.
வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
• பத்து + பாட்டு = பத்துப்பாட்டு
• எட்டு + தொகை = எட்டுத்தொகை
ட, ற ஒற்று இரட்டிக்கும் உயிர், நெடில் தொடர்க் குற்றியலுகரங்களின் பின் வல்லினம் மிகும்.
• ஆடு + பட்டி = ஆட்டுப்பட்டி
• நாடு + பற்று = நாட்டுப்பற்று
முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
• பொது + தேர்வு = பொதுத்தேர்வு
• திரு + குறள் = திருக்குறள்
ஓரெழுத்து ஒரு மொழியின் பின் வல்லினம் மிகும்.
• தீ + சுடர் = தீச்சுடர்
• தீ + பெட்டி = தீப்பெட்டி
• மை + கூட = மைக்கூட
• பூ + கூடை = பூக்கூடை
ஆக, என என்று முடியும் வினையெச்சங்களின் முன் வல்லினம் மிகும்.
• எனக்கூறினான்
• அவனாகச் சொன்னான்
• தருவதாகச் சொன்னான்,
• பார்ப்பதாகக் கூறினாள்,
• தாயெனக் கூறினார்,
• படி எனக் கூறினார்.
ஆய், போய் என்னும் வினையெச்சச் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
• போய்க் கண்டேன்,
• நன்றாய்ச் சொன்னாய்.
இகர, அகர ஈற்று வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும்.
• தேடிப் பார்த்தேன்,
• தேடப் போனேன்.
இனி, தனி, திரு என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
• இனிச் செய்யலாம்,
• தனித்தமிழ்,
• திருச்செந்தூர்
• திருக்குறள்
சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.
• சால + பேசினான் = சாலப்பேசினான்.
• தவ + சிறிது = தவச்சிறிது.
• தவ + புதல்வன் = தவப்புதல்வன்
• சால + சிறந்தவன் = சாலச்சிறந்தவன்
உருவகத்தின் பின் வல்லினம் மிகும்.
- தமிழ் + தாய் = தமிழ்த்தாய்
- தமிழ் + தேன் = தமிழ்த்தேன்
- வாய் + பவளம் = வாய்ப்பவளம்
உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.
• மலர்க்கை,
• தாமரைப்பாதம்,
• சங்குக்கழுத்து,
• புலிப்பாய்ச்சல்.
பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
• இனிப்புப் பண்டம்,
• வட்டப்பலகை,
• வெள்ளைத்தாள்,
• சிவப்புச்சட்டை.
•வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் மிகும் இடங்கள்
அல்வழிப் புணர்ச்சியில் வல்லினம் மிகும் இடங்கள்
நான்காம் வேற்றுமைத் தொகையில் முன்நின்ற சொல் (நிலைமொழி) அஃறிணைப் பெயராக இருந்தால் பின்வரும் வல்லினம் மிகும்.
• குறிஞ்சித் தலைவன்
• படைத்தளபதி.
• கூலிப்படை.
ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.
• மனைப் பிறந்தாா்
• சென்னைப் பல்கலைக்கழகம்.
அரை,பாதி, எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்ச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்.
• அரைக்காசு,
• பாதிப்பணம்,
• எட்டுத்தொகை,
• பத்துப்பாட்டு
இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
• ஆவணித் திங்கள்,
• சாரைப்பாம்பு,
• உழவுத்தொழில்,
• செவ்வாய்க்கிழமை.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின் வரும் வல்லினம் மிகும்.
• ஓடாக்குதிரை,
• கூடாச்சந்தை,
• ஆடாத்தசை,
• பாடாப் பாட்டு.
Comments
Post a Comment