கவியாரம்

 11.12.2023  அன்று மகாக்கவி பாரதியின் 141ம் ஆண்டு பிறந்தநாள்


தமிழன்னையின் தவப்புதல்வனுக்கு தமிழால் கவியாரம்


*கர்வத்தில் மிஞ்சியவனும் நீ*

*காதலில் கொஞ்சியவனும் நீ*

*கிளர்ச்சியை ஊட்டியவனும் நீ*

*கீழ் நிலையில் உள்ளோம் என்பதனை சாட்டியவனும் நீ*

*குழந்தை பருவம் கொண்டே மனதில்*

*கூடி விளையாடு என்று உணர்த்தியவனும் நீ*

*கெடுதலை ஒன்றும் இல்லை உன் கீழ்மைகள் உதறிடடா என்றாய் நீ*

*கேட்பதற்கு மிச்சமுமின்றி அத்தனைக்கும் ஆசை கொண்ட நீ அத்தகு வீரனாயினும்*

*கைத்தொழுதாய் அன்னை பராசக்தியை*

*கொட்டு முரசே என்று கொட்டியவனும் நீ*

*கோழைக்குள்ளும் வீரத்தைத் துளிர்க்கச் செய்தவன்  நீ*


*உன்னை வீழ்த்தும் வலிமை ஜகத்தினில் எவருக்கும் உண்டோ?*

*வாழ்ந்திடுவாய் இன்னும் கோடி நூறாண்டு*

*வணங்கிடுவோம் உந்தன் பாதம் தொட்டு*

Comments

Popular posts from this blog

பொருள் விளக்கம்

பெண்ணே நீ

வல்லினம் மிகா இடங்கள்